26 February 2026

அன்பின் விருந்தருந்த சகோதரர் அனைவரும்

ஞா.கீ:293

To Download Txt Lyrics file

 

293. இராகம்: வசந்தபைரவி                            ரூபகதாளம் (461)

 

பல்லவி

 

          அன்பின் விருந்தருந்த சகோதரர் அனைவரும், வாரும்.

 

அனுபல்லவி

 

            இன்பமுடன் பூர்வ கிறிஸ்தவர் ஒன்றித்

            திருத் துறவாக விருந்துண்ட வாறு போல்

            இணைந்து தக வணிந்து, மிகப்

            பணிந்து மறம் தணிந்து தணிந்து - அன்

 

சரணங்கள்

 

1.         நண்பர்கள் கூட்டத்துக் கிந்த விருந்தொரு

            நல்ல அடையாளம் மதியும்,-ஏசு

            நாதர், அன்பாய் இரும், என்ற கற்பனையை

            நற்கருத்தாய் அகம் பதியும்; மிகப்

            பண்பட யாவரும் கூடிக்குலாவியே

            பரமனை இங்கு துதியும்;-உங்கள்

            பழம் பகை யாவுங் கட்டிச் சுருட்டி அப்

            பாலே எறிந் ததை மிதியும்,

            திண் புவியில் யாரும் ஒன்றிப்பதற் கேற்ற

            செய்கை அறிந்து புரிவதற்கு வகை

            தேடி அன்பை நாடி, மனம்

            கூடி, கீதம் பாடிப் பாடி - அன்

 

2.         உற்ற சிநேக மதற்கு நிகர் சொல்ல

            ஒன்றும் இல்லை, அதை ஓரும்[1];-அதால்

            ஊதியமான சந் தோட சிலாக்கியம்

            ஒக்க இணைந் தங்கு சேரும்;-அன்பு

            பெற்ற சகோதரர் ஒன்றித்து-வாழ்வது

            பெருத்த மாட்சிமை பாரும்;-அதைப்

            பேணி உறாத சத் ராதிகட்கு வெகு

            பீடைகளே[2] வந்து சாரும்;

            கற்றறிந்து வேத கற்பனை மீறாமல்

            கர்த்தருக் கேற்க நடந்து பொறாமையைக்

            களைந்து, கற்பில் விளைந்து, அன்பில்

            தளைந்து[3], தம்மில், குழைந்து குழைந்து - அன்

 

- ஜாண் பால்மர்



[1] நினையும்

[2] துன்பம்

[3] கட்டுண்டு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...