28 February 2026

அன்பே பிர லாபம் அகற்றும் என் அன்பனே

ஞா.கீ:223

Text file Download

 

 

223. இராகம்: செஞ்சுருட்டி                              ஆதிதாளம் (439)

 

                             பல்லவி

 

          அன்பே, பிரலாபம்[1] அகற்றும், என் அன்பனே,

 

                             சரணங்கள்

 

1.         இந்த வேளை வந்து நிர்ப்பந்தம் தீரும் ஐயா;

            சொந்தம் என் ஏசுதேவா, நிந்தை துயரும் நீக்கி - அன்

 

2.         மெத்தவும் பவம் செய்தேன் சத்திய மறந்து முற்றும்;

            இத்தரையை நாடி, உன் சத்துருவானேன் ஐயா - அன்

 

3.         நோயால் வருந்தி யானும் தீயாய் எரிகின்றேனே,

            நேயா, கிறிஸ்து வெனும் தூயா, என தேசுவே - அன்

 

4.         துன்பம் துயரம் நீக்கி இன்பம் அளியும், ஐயா,

            உம்பர்[2] ஒளியே, எந்தன் தம்பிரா, ஏசுநாதா - அன்

 

- ச. யோசேப்பு



[1] புலம்பல்

[2] வானோர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...