03 July 2025

புதுப் பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு

புதுப் பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புதுப் பாட்டுப் பாடு ஜெபத்தோடுப் பாடு

            பரலோகம் இரங்கிடுமே

            சந்தோஷத்தோடே கர்த்தருக்காய்ப் பாடு

            கவலைகள் நீங்கிடுமே!

 

                        ஆஹா... ஹா... ஆஹா... ஹா... - புதுப் பாட்டுப்

 

1.         பரிமள தைலம் வாசனையை வீசும்

            இயேசு என்னும் நாமம் என்றும் மணம் வீசும் - 2

            ஒளியாக உயிராக துதியாகினாய்

            நிறைவாக என் வாழ்வில் பெலனாகினாய் - 2 - ஆஹா... ஹா...

 

2.         நாற்றமுள்ள வாழ்க்கை நறுமணமாகும்

            அக்கிரமம் நீங்கி பசும் பொன்னாய் மாறும் - 2

            புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுவார்

            கனியுள்ள வாழ்க்கையாய் மாற்றிடுவார் - 2 - ஆஹா... ஹா...

 

3.         காரிருள் சூழ்ந்தும் பயம் ஒன்றும் இல்லை

            நெரிந்த என் வாழ்வு முறிவதுமில்லை - 2

            அவர் நாம மகிமைக்காய் உயர்த்திடுவார்

            களிமண் நான் அவர் நாமம் உயர்த்திடுவேன் - 2 - ஆஹா... ஹா...

 

4.         பெயர் சொல்லி அழைத்தார் கரத்தினால் அணைத்தார்

            அக்கினியின் ஜுவாலை அழிக்காது காத்தார் - 2

            தண்ணீரைக் கடந்தாலும் என்னைத் தாங்கினார்

            கண்ணீரில் நனைந்தாலும் என்னைத் தாங்கினார் - 2 - ஆஹா... ஹா...

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...