நல் மீட்பர் வல்லநேசர் உண்டோ

நல் மீட்பர் வல்லநேசர் உண்டோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

10.                    'There is no love like love of Jesus'                                 (108)

 

          நல் மீட்பர் வல்லநேசர் உண்டோ

            உன்னத நேசம் பார்

            மெய் ஆறுதல் அடைந்து வாழ்ந்திட

            நம்மை நடத்துவார்.

 

                        மட்டிலா, நீங்கிடா

                        யேசுவின் அன்பைப்பார்

                        அவ்வன்பரின் பாதத்தை அண்டுவாய்

                        பாவி! வா என்கிறார்.

 

2.         பேரன்பைக் காட்டின யேசு போல

            பாவியின் நேசர் யார்?

            நம் உள்ளத்தின் கவலை யாவையும்

            அவர் கண்டறிவார்.

 

3.         நல் நேசர் இயேசுவின் நேத்திரம் போல்

            பேரருள் கண் உண்டோ?

            அக்கண்ணுக்கு மறைய முயன்றும்

            அது கூடியதோ

 

4.         நல் மீட்பர் சத்தத்தைப் போலும் இல்லை

            இனிய ஓசையும்

            மா மதுரமாய்க் காதுக்கின்பமாய்

            அது தொனித்திடும்.

 

5.         அவ்வின்ப சத்தம் அன்போடு கேட்டு

            இணங்கிச் செல்லுவோம்

            பின் மோட்சத்தில் யேசுவின் மார்பினில்

            சுக வாழ்வடைவோம்.

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே