பூரண அழகுள்ளவரே என் இயேசுவே

பூரண அழகுள்ளவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          பூரண அழகுள்ளவரே என் இயேசுவே

            பூரண அழகுள்ளவரே - 2

            சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே

            பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே

 

                                    அனுபல்லவி

 

                        போற்றுவேன் வணங்குவேன்

                        துதி பாடி மகிழ்வேன்

 

                                    சரணங்கள்

 

1.         பவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே

            பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே - 2

            மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே

            ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே - போற்றுவேன்

 

2.         மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே

            ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே - 2

            ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே

            அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே - போற்றுவேன்

 

3.         அழகினை இழந்தே அந்தக் கேடடைந்தீரே

            முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே - 2

            என் பாவம் போக்க உம்மை பாழாக்க

            உம் ஜீவன் தந்தே ஈசனாய் எனக்காய் - போற்றுவேன்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே