பூமியின் குடிகளே நாம் யாவரும்
பூமியின்
குடிகளே நாம் யாவரும்
கர்த்தரை
என்றும் போற்றிப்
பாடுவோம்
தேவனை
இராஜனை கொண்டாடுவோம்
1. பாடுவோம்
நம் தேவன் இயேசுவை
கூடுவோம்
எந்நாளும் சந்நிதி
- 2
மகிழ்ச்சியோடே
கர்த்தரின் முன்பினில்
சத்தமாய்
போற்றிப் பாடுவோம்
- 2 - பூமியின்
2. கர்த்தரே
நம் தேவன் நல்லவர்
அறியுங்கள்
என்றென்றும் நல்லவர்
- 2
அவரின்
ஜனங்கள் மேய்ச்சலின்
ஆடுகள்
இயேசுவின்
பின்னே செல்லுவோம்
- 2 - பூமியின்
3. வாசலில்
எந்நாளும் துதியுடன்
புகழ்ந்துமே
என்றென்றும் நுழையுங்கள்
- 2
அவரின்
நாமம் புகழ்ந்து
துதித்து பாடுங்கள்
இயேசுவை என்றும் உயர்த்துங்கள் - 2 - பூமியின்
Comments
Post a Comment