பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து

பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து

          என்னை நீர் தாங்கிடுமே

            திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து

            என்னை நீர் நடத்திடுமே

 

                        பெலன் தாருமே பெலன் தாருமே

                        உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

 

1.         எலியாவைப் போல் வனாந்திரத்தில்

            களைத்து போய் நிற்கின்றேனே

            மன்னாவைத் தந்து

            மறுபடி நடக்கச் செய்யுமே

 

2.         போராட்டங்கள் சூழ்ந்ததாலே

            சோர்ந்து போய் நிற்கின்றேனே

            சோராமல் ஓட திட மனம் அளித்திடுமே

 

3.         மனிதர்கள் நிந்தையால்

            மனம் நொந்து நிற்கின்றேனே

            மன்னித்து மறக்க

            உந்தனின் பெலன் தாருமே

 

4.         மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்

            அடிக்கடி தவறுகிறேன்

            பரிசுத்த வாழ்வு வாழ

            பெலன் தாருமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே