கர்த்தரை உயர்த்திடும் காலம்
கர்த்தரை
உயர்த்திடும்
காலம்,
இது நன்றியால்
துதித்திடும்
நேரம்,
தேவ வார்த்தையை
நம்பிடும் யாரும்,
கிருபையைக்
கொண்டாடிடுவோம்.
- (2)
1) ஒதுக்கப்பட்ட
என்னை சேர்த்துக்கொண்டீர்,
தள்ளப்பட்ட
என்னை அணைத்துக்
கொண்டீர் - (2)
கேட்டதைத்
தந்திட்டீர்,
ஆசீர்வதித்திட்டீர்,
கேட்க மறந்ததையும்
சேர்த்துக் கொடுத்திட்டீர்
- (2) ...(கர்த்தரை)
2) பலவீன நேரத்தில்
சுமந்து கொண்டீர்,
(என்) தோல்வியின்
நேரத்தில் தோள்
கொடுத்தீர் - (2)
இதுவரைக்
காத்தவர், இனிமேலும்
காத்திடுவீர்,
என்ற நிச்சயத்தை
எனக்கு தந்தீர்
- (2) ... (கர்த்தரை)
3) தோல்வி
இல்லை எனக்குத்
தொய்வும்
இல்லை,
எவரைக்
கண்டும் எனக்கு
பயமுமில்லை -(2)
அழைத்த ஆண்டவர்,
என்னோடு இருக்க,
ஒருபோதும்
அசைக்கப்
படுவதில்லை - (2)
... (கர்த்தரை)
- Bishop Kingsly
Comments
Post a Comment