பூவைப் போன்ற வாழ்க்கை

பூவைப் போன்ற வாழ்க்கை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பூவைப் போன்ற வாழ்க்கை - இது

                        புல்லை போன்ற வாழ்க்கை (2)

                        ஒருநாள் அழிந்திடும்

                        புகை போல் பறந்திடும்

 

1.         நீயும் நானும் வாழ்வது

            கானல் நீரின் ஓடம் போல்

            காணும் இந்த காட்சிகள்

            கலைந்து போன மேகங்கள்

                        இதை நீ அறிவாயா இயேசுவை ருசிப்பாயா - (2) - பூவைப்

 

2.         பூவைப் போல தோன்றியே

            நிழலைப் போல மறைகிறான்

            அவர் சேர்த்து வைத்த யாவையும்

            விட்டு விட்டு போகிறான்

                        இதை நீ அறிவாயா இயேசுவை ருசிப்பாயா - (2) - பூவைப்

 

3.         உன்னை மீட்க தன்னையே

            பலியாய் தந்தார் சிலுவையில்

            ஜீவன் தந்த அவருக்காய்

            உந்தன் வாழ்வை தருவாயா

                        இயேசு தான் நித்தியமே இவ்வுலகமோ அநித்தியமே (2) - பூவைப்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே