இயேசு சாமி நல்லவரு

இயேசு சாமி நல்லவரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இயேசு சாமி நல்லவரு

            எல்லோருக்கும் இரட்சகரு (நம்ம) - 2

            பாவம் யாவும் மன்னித்தாரு - (2)

            நம்ம சாபங்கள் எல்லாம் தள்ளிட்டாரு - 2

 

                        நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு

                        வல்லவரு வல்லவரு வார்த்தையிலே வல்லவரு

                        அற்புதரு அற்புதரு அதிசயம் செய்பவரு

                        இயேசு இயேசு

                        இயேசு சாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு (நம்ம) - (2)

 

1.         கட்டப்பட்ட மனிதர்களின் கட்டவீழ்க்கும் கர்த்தரவர்

            காயப்பட்ட பிள்ளைகளின் காயங்களை ஆற்றுபவர் - 2

            கல்வாரி இரத்தத்தை ஊற்றிடுவார்

            கவலை கண்ணீர் எல்லாம் மாற்றிடுவார் - 2  - நல்லவரு

 

2.         சேனைகளின் கர்த்தர் பெரியவராம்

            சேதமின்றி நம்மைக் காப்பவராம்

            சிலுவையில் சாத்தானை ஜெயித்தவராம்

            மரணத்தை ஜெயமாக்கி எழுந்தவராம் - 2

            யுத்தத்தில் இயேசு வல்லவராம்

            எல்லா ஜனத்துக்கும் இரட்சகராம் - 2 - நல்லவரு

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே