17 July 2025

காற்றில் பறந்தாடும்

காற்றில் பறந்தாடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

23.                        'Gleaming in the sunshine'                    (407)

 

1.       காற்றில் பறந்தாடும்

            எங்கள் கொடி பார்

            சூரிய ஒளி தன்னில்

            இலங்குது பார்

            மீட்பர் சேனை முன்னே

            அது பறக்கும்

            யுத்தம் ஓய்ந்து ஜெயம்

            பெறும் அளவும். - காற்றில்

 

2.         யேசு எங்கள் ராஜா

            யுத்தம் செய்குவோம்.

            ஆர்ப்பரித்துப் பாடி

            முன்னே செல்லுவோம்

            படைக் கோலம் யாவும்

            அவர் தருவார்

            பின்பு மோட்ச வீட்டில்

            சேர்த்து வாழ்விப்பார். - காற்றில்

 

3.         யுத்த மும்முரத்தில்

            பால்ய சேனையார்

            மெத்த வீரம் காட்டிக்

            கொடிபிடித்தார்

            சத்யக் கொடி சூழ்ந்து

            ஒன்றாய்ச் செல்கிறார்

             சிறுபடை வீரர்

            யுத்தம் செய்கிறார். - காற்றில்

 

4.         பாலகர் என்றாலும்

            யேசு நோக்குவார்,

            பால்ய சேனை யென்று

            புறக்கணியார்

            பாலர் பலபேரும்

            வீரம் காட்டினார்

            மீட்பர் அன்பால் யுத்தம்

            செய்து ஜெயித்தார். - காற்றில்

 

5.         பாரம் சுமந்தோனே

            வந்து சேருவாய்,

            அவர் சத்தம் கேட்டு

            மீட்பைப் பெறுவாய்

            தாமதம் செய்யாமல்

            அவர் சேனையில்

            வந்து நின்று வெல்லு

            யுத்தக் களத்தில். - காற்றில்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...