புறப்படுவோம் நாம் விரைவாய்

புறப்படுவோம் நாம் விரைவாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    புறப்படுவோம் நாம் விரைவாய்

                    யுத்தம் செய்திட புறப்படுவோம் நாம்

                        அரண்களை அழித்து நுழைந்திடுவோம்

                        என்றும் ஜெயமதை அடைந்திடுவோம்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         கொள்ளைப் பொருளை சுதந்தரிக்க செல்லுவோம்

            எல்லைத் தாண்டி சென்றுமே அழித்து வீழ்த்துவோம்

            ஆத்துமாக்களை ஆயிரங்களாய்

            தேவ ராஜ்ஜியம் கொண்டு வந்து சேர்ப்போமே

 

2.         அந்தகார பேயினை அழித்துமே

            வெற்றி வாகை சூடியே மகிழ்ந்து பாடியே

            சர்வ வல்லவர் முன்னே செல்கின்றார்

            தேவ சேனை வீரராக மாறுவோம்

 

3.         நமது யுத்தம் கர்த்தர் செய்ய ஆயத்தம்

            நமது முன்னே செல்லும் தேவன் தானே தலைவரே

            பாளையம் எங்கும் ஜெயத்தின் கொடிகளே

            மகிமை கனமும் துதியை என்றும் செலுத்துவோம்

 

4.         ஆயுதங்கள் யாவையும் தரித்துமே

            யுத்தம் செய்ய தைரியமாய்

            நாம் முன்னே செல்லுவோம்

            தாழ்மை வேண்டுமே தியாகம் வேண்டுமே

            ஞானம் ஒழுக்கம் பயிற்சி யாவும் தேவையே

 

5.         பொல்லா சாத்தான் வல்லமை அழிந்திட

            வல்ல தேவன் இயேசுவே நம் முன்னே செல்கின்றார்

            எல்லை சொந்தமாய் எடுத்து நிறுத்திட

            இயேசு நாமம் என்றுமே உயர்த்துவோம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே