பூரண கிருபையின் மயமே தேவா

பூரண கிருபையின் மயமே தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

80. இராகம்: இங்கிலீஸ்.                                              ஆதிதாளம் (401)

 

                             பல்லவி

 

                   பூரண கிருபையின் மயமே, தேவா,

                        பொற்புச் செப்பத் தொப்பற் றதிசயமே.

                        ஆரண சுசஜெப சொரூபா, யோவா,

                        அடியனையே இரட்சித் தாள்.

 

                             அனுபல்லவி

 

                        சீருச்சப் பட்சத் திரு முதலே,

                        சிட்டோர்க்காதரவே, யனுசாரி,

                        தீமைக் கட்டற்றுப், பூமக்கட் கொத்துச்,

                        சாமத்திற் பெத்தலேமிற் புற் கொட்டில்

                        மேவு ரூபா, தேவ ரூபா, மூவொரூபா, ஜீவவா,

                        தேசருள் வாசநேசா சீமா, சுரர் பதியே,

                        மாசதிலேசு ராஜ பூமா, நரர் துதியே,

                        தேவரெலாம் நீடியடி தொழுபரா, கா, வா,

                        தேடரு முனிரு சரண் மலர் துணை, துணையே, - பூரண

 

                             சரணம்

 

            சாதிகளுட பரவசமே, நேயா,

            சத்தியத் துத்தியச் சொற்கப் பதி நிஜமே,

            ஆதிவினையற வருசுதா, தீயோர்க்

            கருமையினோர் மத்யஸ்தா;

            மா தத்துவச் சுத்தப் பரவெளியே,

            வற்றா வாரிதியே யசரீரி.

            வானத்துப் பொற்புக் கானத்திற் கொட்டிற்

            றானத்திற் புக்கத் தானுற்றுற்பித்த

            காவலா வா, மாவல்லா, ஓ! நலவா, மேலவா,

            மானுவேலாசை யேசையா மீசுர வடிவே,

            பானுவே, நேச மேசியா வாச முடிவே,

            மாசதிலா மூவரு மொரு தெய்வமே, நாதா,

            மாயை யற வருள் புரி தினந் துதியே. - பூரண

 

- வேதநாயகம் சாத்திரியார்.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே