பெத்தலையின் சத்திரத்தில் பிறந்தாரு
பெத்தலையின்
சத்திரத்தில்
பிறந்தாரு
கன்னிமரி
மடியினிலே தவழ்ந்தாரு
ஆரிராரோ
பாட்டு பாடி
பணிந்து
கொள்ள வந்தோமையா
1. ஊரு
உறங்கும் நேரத்தில
உதவி செய்வாரு யாருமில்ல
சத்திரக்காரனோ
கைவிரிப்பு
மாட்டுத்
தொழுவமே கையிருப்பு
அங்கே தான்
பிறந்தார் நம்
பாலகன்
இதை ஆனந்தமாக
கொண்டாடுவோம்
2. இயேசு சாமி
நல்லவரு - ரொம்ப
இரக்க குணமும்
உள்ளவரு
ஏழையாக
பிறந்தவரு
எளியோர்
வாழ்வின் ஒளிவிளக்கு
ரட்சிக்க
வந்த இரட்சகரே
இனி இன்னல்கள்
இல்லை நம் வாழ்விலே
3. அன்பால்
உலகை வென்றவரு
அற்புதங்கள் பல
செய்தவரு
அன்பாய்
நாமும் வாழ்ந்திடுவோம்
அகிலம்
போற்ற உயர்ந்திடுவோம்
நியாயம்
தீர்க்க வரப்போகிறார்
அவர் நியாயாதிபதியாய்
வந்திடுவார்
Comments
Post a Comment