புனித நன்னாளிதுவே

புனித நன்னாளிதுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        புனித நன்னாளிதுவே

                        புனித நன்னாளிதுவே

                        பூரித்துப் பாடிடுவோம் ... பரனைப்

                        பூரித்துப் பாடிடுவோம்

 

                        மனித உருவிலே

                                    மாதேவ மைந்தர்

                        மேதினி வந்த தின்னாள் ... இயேசு

                        மேதினி வந்த தின்னாள் ... புனித

 

1.         அருமைகள் பெருமைகள்

                        அளவில்லா மேன்மைகள்

            அனைத்தையும் அவர் துறந்தே

            வெறுமைக் கோலத்தோடு

                        வேலையாளைப் போல்

            விரைந்திங்கு வந்த நன்னாள் ... மீட்பர்

            விரைந்திங்கு வந்த நன்னாள் ... புனித

 

2.         எல்லோரும் ஈடேற

                        இருளெங்கும் மறைந்தோட

            ஏற்றமெல்லாம் வரவே

            கல்வாரிச் சிலுவையைக்

                        கருத்தினில் வைத்தே

            கர்த்தர் பிறந்த பொன்னாள் ... இன்று

            கர்த்தர் பிறந்த பொன்னாள் ... புனித

 

3.         இறைவனார் தந்திட்ட

                        இணையிலா ஈவாக

            இயேசுபிரான் வந்ததால்

            தரையுள்ளோர் யாவரும்

                        துதிபாடி மகிழவே

            தினம் தினம் இரட்சண்ய நாள் ... இங்குத்

            தினம் தினம் இரட்சண்ய நாள் ... புனித

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே