தேனும் பாலும் ஓடிடும் கானான்

தேனும் பாலும் ஓடிடும் கானான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        தேனும் பாலும் ஓடிடும் கானான்

                        உனக்கே சொந்தம் என்று கூறி

                        உன்னையும் என்னையும் அழைக்கின்றாரே

                        செல்வோம் நாம் சுதந்தரிப்போம் - 2

 

1.         செழிப்பான கானானை உன் முன்னே பார்

            திறவுண்ட உள்ளங்கள் அங்குண்டு பார்

            சகலமும் உனக்கென்று கூறியவர்

            செல்கின்றார் தாமே முன்னே - தேனும்

 

2.         அழிந்திட்ட இடங்களும் செழித்திடவே

            விழுந்திட்ட ஆன்மாக்கள் பிழைத்திடவே

            தருணங்கள் அளித்தவர் நிற்கின்றாரே

            செல் சுதந்தரிக்கச் செல் - தேனும்

 

3.         நிலையற்ற அலைமோதும் கடலினைப் பார்

            அலைந்தேங்கி திகைத்திடும் மானிடர் பார்

            விலையில்லா ஆத்துமாவாம் மீன்களையும்

            செல் சுதந்தரிக்கச் செல் - தேனும்

 

 

- IMS Songs

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே