புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றார்
புல்லுள்ள
இடங்களில் மேய்க்கின்றார்
அமர்ந்த
தண்ணீரண்டை நடத்துகின்றார்
அபிஷேகத்தால்
என்னை நிரப்புகின்றார்
என் பாத்திரம்
நிரம்பி வழியச்
செய்தார்
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
1. காற்றுக்கு
ஒதுக்காய்
இருக்கின்றார்
பெருவெள்ளத்துக்கு
புகலிடமாய்
வறண்ட நிலத்துக்கு
நீர்க் கால்களாய்
விடாய்த்த
பூமிக்கு நிழலாய்
உள்ளார்
2. ஏழைக்கு
பெலனாய் இருக்கின்றார்
எளியோர்க்கு
என்றும் திடனுமானார்
பெருவெள்ளத்துக்கு
அடைக்கலமானார்
வெயிலுக்கு
ஒதுங்கும் நிழலுமானார்
3. நெருக்கத்திலே
எனக்கு தஞ்சமானார்
ஒடுக்கப்படும்
வேளை அணைத்துக்
கொண்டார்
முகத்தின்
கண்ணீரை துடைக்கின்றார்
மரணத்தை
ஜெயமாக விழுங்கிவிட்டார்
Comments
Post a Comment