பூமியின் மாந்தரீர் கூடிவாரீர்
1. பூமியின்
மாந்தரீர்
கூடிவாரீர்
பூரித்தே
பேரின்பமாய்ப்
பாடி வாரீர் - 2
தேமிசைப்
பாமலர் சூடிடுவீர்
- 2
தேவனின்
திருமுன்னே
நாடிடுவீர்
2. நம்மையிங்
காக்கியோன்
ஓரிறையாம்
நாமவர்
உடைமையாம்
ஓர் நிறையாம்
- 2
மெய்மையின்
மேய்ச்சலின் செம்மறிநாம்
- 2
மேவிநம்
ஆயனை நாமறிவோம்
3. வாசலில்
நன்றி கூர் உணர்வோடே
வாருங்கள்
திருச்சுற்றில்
துதியோடே - 2
நேசமாய்
உளமெல்லாம்
கனிந்தெழுந்தே
- 2
நிறைபெயர்
போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே
4. ஆண்டவன்
நன்மையின் மயமாவான்
ஆரருள்
மாறாத நயமாவான்
- 2
ஆண்டவன்
பேருண்மை
தலைமுறையாய் -
2
ஆண்டென்றும்
தாங்கிடும் அருள்
நிறைவாய்
- பேராசிரியர் V.P.K. சுந்தரம்
YouTube Link
Comments
Post a Comment