பூமியின் மாந்தரே மகிழ்ந்து பாடுங்கள்
பூமியின்
மாந்தரே மகிழ்ந்து
பாடுங்கள்
பூலோக
மீட்பர் பிறந்தார்
விண்ணகம்
துறந்து உலகினில்
உதித்த
விமலனை
போற்றிடுவோம்
- 2
பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
பிறந்தாரே
இத்தரை
மீதில் பாவங்கள்
போக்க
பெத்தலையில்
பிறந்தார் - 2
1. ஆதியில்
மலர்ந்த ஜீவ வார்த்தை
ஆதிபன் மனுவானார்
- 2
ஆதாமின்
பாவம் சாபங்கள்
நீங்கிட
ஆண்டவர்
இயேசு பிறந்தாரே
- 2 - பிறந்தார்
2. ஏசாயா
வாக்கு நிறைவேற
ஏசு பரன் பிறந்தார்
- 2
அதிசயமானவர்
நித்திய தேவன்
ஆலோசனை
கர்த்தர் பிறந்தாரே
- 2 - பிறந்தார்
3. பாவம்
நிறைந்த உலகை மீட்க
பாரினில்
உதித்தாரே - 2
சாத்தானின்
தலையை நசுக்கிட
தேவன்
சமாதான
தேவனாய் பிறந்தாரே
- 2 - பிறந்தார்
Comments
Post a Comment