பெருக்கத் திருக் கருணைப்பிதா அத்தனே

பெருக்கத் திருக் கருணைப்பிதா அத்தனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

32. இராகம்: தோடி                                 ஆதிதாளம் (385)

 

                             பல்லவி

 

          பெருக்கத் திருக் கருணைப்பிதா அத்தனே[1]!

 

                             அனுபல்லவி

 

            நெருக்கப்படும் எனை ஆள், நித்ய கர்த்தனே - பெரு

 

                             சரணங்கள்

 

1.         வல்லபம்[2] என்னுயிர் காக்கும் வெகுமானம்;

            நல்லவழி சேர்க்குதுன் உன்னத ஞானம் - பெரு

 

2.         சுத்திகரிக்குதுன் துய்ய பரிசுத்தம்;

            பத்திரப்படுத்து தெனை நீதிப் பொருத்தம் - பெரு

 

3.         சருவ வியாபகம் எனைச் சார்ந்திருக்குது

            பொறுமை சினத்தைப் பொருந்தா துருக்குது[3] - பெரு

 

4.         ஆளுகை எனைத் தெரிந்துன் அடி சேர்க்குது;

            மீளவும் உன் நன்மை செல்வம் மிக ஆக்குது - பெரு

 

5.         நேசத்தின் இரக்கம் என் பவத்தை நீக்குது;

            மாசற்ற உன் அன்பெனை மகிழ்ச்சியாக்குது - பெரு

 

6.         உன்தன் உண்மை மோட்ச வீட்டிற்குள்ளே கூட்டுது;

            சந்தேகம் இல்லாமல் முடிதான் சூட்டுது - பெரு

 

 

- வே.சா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] கடவுள்

[2] அருஞ்செயல்

[3] கலக்குதல்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே