28 February 2019

மலையாதே நெஞ்சமே இப்படி நம்மை

மலையாதே நெஞ்சமே இப்படி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             மலையாதே நெஞ்சமே

 

136. (44) காம்போதி                                ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                   மலையாதே, நெஞ்சமே,-இப்படி நம்மை

                        வகுத்தவனே தஞ்சமே.

 

                             அனுபல்லவி

 

            அலையாதருள் மந்த்ர கலையாகம சுந்த்ர

            அருத்தப் பண் கருத்தர்க்கென்

            றுரித்தல் கொண் டிருத்திக்கொள். - மலை

 

                             சரணங்கள்

 

1.         கருத்தர் கட்டுவதல்லோ வீடு,-நரர்

            கட்டும் கிரியைகள் வீண் பாடு,

            வருத்தப்படுவதென்ன கேடு?-பேயின்

            மயக்கமெல்லாம் விட்டுப்போடு;

            தரித்திரத் திரள் இக்கட்டு பெருத்த கவலைப்பட்டுச்

            சலியாதிரு, நலியாதிரு

            தந்தையார் சுதன் வந்த நாள் இது. - மலை

 

2.         எண்ணத்தினால் என்னகூடும்?-தெய்வம்

            இட்டதல்லோ வந்து நீடும்;

            மண்ணைச் சதம் என்றெண்ணி, வாடும்-மக்கள்

            மனதில் துயரம் வந்து மூடும்;

            கண்ணைத் திறந்து நோக்கு, விண்ணைச் சிறந்துள்ளார்க்குக்

            குருத்தாய் இரு; உரித்தாய் இரு;

            குருத்தரானவர் ஒருத்தரே துணை. - மலை

 

3.         என்ன கவலைப்பட்டும் நஷ்டமே,-கிறிஸ்

            தேசு பிறந்ததுன் அதிஷ்டமே;

            உன்னதன் பண்ணின திட்டமே,-உனக்

            கொழுங்கு ப்ரமாணத்தின் சட்டமே;

            பின்னப்பட் டுலையாதே, சின்னப்பட் டலையாதே;

            பெருத்த நாள் இது, கருத்தர்நாள் இது,

            பெலப்பாய் இரு, கெலிப்பாய் இரு. - மலை

 

 

- வே. சாஸ்திரியார்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

நம்பினேன் உன தடிமை நான் ஐயா


நடத்திக் காப்பதுன் கடமை

200. (232) ஆனந்தபைரவி                                   ரூபக தாளம்

பல்லவி

          நம்பினேன், உன தடிமை நான், ஐயா;-
          திடப்படுத்தி என்றனை-
          நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா

சரணங்கள்

                        உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற
                        உயிர்களும் பல பொருள்களும் தொழும்
                        தம்பிரானே, மெய் யம்பராபரா,
                        தாசன் மீது நன் னேசு அருள் செய். - நம்பி

சரணங்கள்

1.         தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின்
                        அருள்
            செய்து பின்வரும் இடர்களை அறுத்து,
            வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்
                        செல்ல, உன்
            மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;
            ஆதாரம் எனக்கார், உனை அன்றி?
            அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன்
            பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்
            பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! - நம்பி

2.         சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த
            ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்,
            நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய,
            நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்;
            அத்தனும் அனு கூலனுமான
            பத்தனே; பரிசித்தனே, உனைப்
            பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! - நம்பி

3.         ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை
            உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்;
            ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம்
                        செய்ய
            ஆவியும் அதின் ஈவதும் வேணும்?
            ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
            இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
            வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
            வாரும், கிருபை தாரும், ஐயனே! - நம்பி

- மரியான் உபதேசியார்


[1] வானவரும்

என் உள்ளங் கவரும் நீர் மரித்த


என் உள்ளங் கவரும்

199. உசேனி                                        ரூபக தாளம்

பல்லவி

                   என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த
                   இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட.

அனுபல்லவி

            என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
            இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. - என்

சரணங்கள்

1.         உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்,
            உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்,
            எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும்,
            இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. - என்

2.         சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
            முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
            அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
            சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட. - என்

3.         உந்தனடிதனில் உறைந்து தனித்து
            ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்;
            என் தேவனே, அதி நேசமாய் உம்முடன்
            இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். - என்

4.         அம்பரா, மரண ஆழி[1] தாண்டும் வரை
            அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு;
            என் பரனே, உந்தன் அன்பின் ஆழத்தை நான்
            இம்மையில் கூடியமட்டும் அறிந்திட. - என்
- வே. சந்தியாகு


[1] கடல்

தேவனே நான் உமதண்டையில்


தேவனே நான் உமதண்டையில் சேர்வதே

198. ஆனந்தபைரவி                                       ஏகதாளம்

பல்லவி

          தேவனே, நான் உமதண்டையில்-இன்னும் நெருங்கிச்
          சேர்வதே என் ஆவல் பூமியில்.

அனுபல்லவி

            மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
            கோவே,[1] தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன். -தேவனே

சரணங்கள்

1.         யாக்கோபைப்போல், போகும் பாதையில்-பொழுது பட்டு
            இராவில் இருள் வந்து மூடிட,
            தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
            நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே

2.         பரத்துக்கேறும் படிகள் போலவே-என் பாதை தோன்றப்
            பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
            கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
            அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே

3.         நித்திரையினின்று விழித்துக்-காலை எழுந்து
            கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
            இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர்க் கல் நாட்டுவேனே,
            என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன். - தேவனே

4.         ஆனந்தமாம் செட்டை விரித்துப்-பரவசமாய்
            ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
            வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்,
            மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன். - தேவனே

- வே. சந்தியாகு


[1] அரசனே

அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா

கி.கீ:197

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                             ஏசுநாதா உன் அடைக்கலமே

 

197. சங்கராபரணம்                                         ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்

            அடைக்கலம் அடைக்கலமே!

 

                             அனுபல்லவி

 

            திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்-கு. - அடை

 

                             சரணங்கள்

 

1.         ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,

            அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;

            மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே

            தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! - அடை

 

2.         கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே

            மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;

            கெட்டவனே போவெனக் கிளத்தினும்[1] நியாயமே,

            கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! - அடை

 

3.         சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்

            நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்;

            பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை

            எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! - அடை

 

4.         என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்

            என்று சொன்ன வாக்கதினில் எனக்கும் பங்கில்லையோ?

            அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு

            இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? - அடை

 

- தேவசகாயம் உபாத்தியாயர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] கூறினும்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...