ஆ, களிகூர்ந்து பூரித்து
1. ஆ, களிகூர்ந்து பூரித்து
மகிழ், என் மனதே
பராபரன்தான் உனது
அநந்த பங்காமே.
2. அவர்
உன் பங்கு, உன் பலன்;
உன் கேடகம் நன்றாய்த்
திடப்படுத்தும் உன் திடன்;
நீ கைவிடப்படாய்.
3. உன்
நெஞ்சு ராவும் பகலும்
துக்கிப்பதென்ன?
நீ
உன் கவலை, அனைத்தையும்
கர்த்தாவுக்கொப்புவி.
4. உன்
சிறு வயது முதல்
பராமரித்தாரே;
கர்த்தாவால் வெகு மோசங்கள்
விலக்கப்பட்டதே.
5. கர்த்தாவின்
ஆளுகை எல்லாம்
தப்பற்றதல்லவோ,
அவர் கைசெய்கிறதெல்லாம்
நன்றாய் முடியாதோ?
6. ஆகையினால்
கர்த்தாவுக்கு
நீ பிள்ளைப் பக்தியாய்
எப்போதும் கீழ்ப்படிந்திரு
அப்போது வாழ்வாய்.
Comments
Post a Comment