அகோர காற்றடித்ததே


Fierce raged the tempest                                St. Aelred

352                                                                    8, 8, 8, 3

1.       அகோர காற்றடித்ததே,
            ஆ! சீஷர் தத்தளித்தாரே;
            நீரோ நல் நித்திரையிலே
                        அமர்ந்தீர்.

2.         "மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
            எழும்பும்" என்க, தேவரீர்;
            காற்றை அதட்டிப் பேசினீர்
                        "அமரு".

3.         அட்சணமே அடங்கிற்றே
            காற்று கடல்-சிசுபோலே;
            அலைகள் கீழ்ப்படிந்ததே
                        உம் சித்தம்.

4.         துக்க சாகர கோஷ்டத்தில்
            ஓங்கு துயர் அடைகையில்,
            பேசுவீர் ஆற உள்ளத்தில்,
                        "அமரு".

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே