அதிசயங்களை எல்லா இடமும்
Now thank we all our God
Bavarian 125
386 6, 7, 6, 7, 6, 6, 6, 6
1. அதிசயங்களை
எல்லா
இடமும் செய்யும்
கர்த்தாவை, வாக்கினால்
இருதயத்திலேயும்
துதியுங்கள்; அவர்
நாம் ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும்
இரக்கம் செய்தாரே.
2. நர தயாபரர்
முடிய ஆதரித்து,
நற்சமாதானத்தால்
மகிழ்ச்சியை அளித்து,
தயையை நம்முட
மேல் வைத்தெந்நேரமும்
ரட்சித்து, தீமையை
எல்லாம் விலக்கவும்.
3. உன்னதமாகிய
விண்மண்டலத்திலுள்ள,
மாறாத உண்மையும்
தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும்
திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும்
துதி உண்டாகவும்.
வேறு
வசனம்
Nun danket
1. சர்வத்தையும்
அன்பாய்
காப்பாற்றிடும் கர்த்தாவை,
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்;
மா நன்றி கூறியே,
சாஷ்டாங்கம் பண்ணுவோம்.
2. தயாபரா, என்றும்
எம்மோடிருப்பீராக;
கடாட்சம் காண்பித்து
மெய் வாழ்வை ஈவீராக;
மயங்கும் வேளையில்
நேர்பாதை காட்டுவீர்;
இம்மை மறுமையில்
எத்தீங்கும் நீக்குவீர்.
3. வானாதி வானத்தில்
என்றென்றும் அரசாளும்
திரியேக தெய்வத்தை,
விண்ணோர் மண்ணோர் எல்லோரும்
இப்போதும் எப்போதும்
ஆதியிற்போலவே
புகழ்ந்து ஸ்தோத்திரம்
செலுத்துவார்களே.
Comments
Post a Comment