ஆ இன்ப இல்லமே! நீ என்றும்


Lobe den Herren

230                                                                 14, 14, 4, 7, 8

1.       ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
                        தழைத்து வாழ்க;
            அன்புடன் பாலர் யாரும் அங்கு
                        ஐக்கியமாய் ஓங்க;
            அன்னை தந்தை
                        ஆவலாய்ப் பாலகரை
            ஆண்டவன் பாதம் படைக்க.

2.         ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்,
                        சுகம் தழைக்க;
            உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
                        உகந்து செய்ய;
                                    பக்தியுடன்
            பற்பல சேவை ஆற்றி,
                        கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

3.         ஆ இன்ப இல்லமே! நன்மை
                        பெருகும் அந்நாளில்
            ஆண்டவர் நாமத்தை ஆர்வ
                        நன்றியுடன் போற்று;
                                    துன்பம் துக்கம்
                        துயரம் தொடர் நாளில்
            அன்றும் அவரைக் கொண்டாடு.

4.         ஆ இன்ப இல்லமே! உன்
                        உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
            அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
                        என்றும் நடத்தும்;
                                    இவ்வாழ்வின்பின்
                        உன் மக்களை அவரே
            விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

(315, 318, 320, 324, 326 பாக்களும் பொருத்தமானவை)

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே