Posts

Showing posts from September, 2018

ஓர் முறை விட்டு மும்முறை

Forsaken once and thrice denied Derry 153                                                                           8, 8, 8, 6 1.           ஓர் முறை விட்டு மும்முறை             சீமோன் மறுத்தும் ஆண்டவர்             என்னிலே அன்புண்டா? என்றே                         உயிர்த்தபின் கேட்டனர். 2.          விஸ்வாசமின்றிக் கர்த்தரை             பன்முறை நாமும் மறுத்தோம்;             பயத்தினால் பலமுறை                         நம் நேசரை விட்டோம். 3.          சீமோனோ சேவல் கூவுங்கால்             மனம் கசந்து அழுதான்             பாறை போல் நின்று பாசத்தால்                         கர்த்தாவைச் சேவித்தான். 4.          அவன் போல் அச்சங்கொள்ளினும்,             நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்;             பாவத்தால் வெட்கம் அடைந்தும்                         கண்ணீர் சொரிந்திலோம். 5.          நாங்களும் உம்மை விட்டுமே             பன்முறை மறுதலித்தும்             நீர் எம்மைப் பார்த்து இயேசுவே                         நெஞ்சுருகச் செய்யும். 6.          இடறும் வேள

ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்

O what the joy and the glory must be O quanta qualla 402                                                                            10, 10, 10, 10 1.          ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்             பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?             வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்;             ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2.          ராஜ சிங்காசன மாட்சிமையும்             ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்             இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்             அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3.          மெய் சமாதானத் தரிசனமாம்             அக்கரை எருசலேம் என்போம் நாம்             ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே             வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4.          சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்             தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?             பேரருள் ஈந்திடும் ஆண்டவா, நீர்             பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர். 5.          ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,             விடிதல் முடிதல் இல்லாததாம்;  

ஓசன்னா பாலர் பாடும்

All glory laud and honour St. Theodulph 92                                                        7, 6, 7, 6 with refrain                         ஓசன்னா பாலர் பாடும்                               ராஜாவாம் மீட்பர்க்கே                         மகிமை, புகழ், கீர்த்தி                                     எல்லாம் உண்டாகவே 1.          கர்த்தாவின் நாமத்தாலே                          வருங் கோமானே, நீர்             தாவீதின் ராஜ மைந்தன்,                         துதிக்கப்படுவீர். 2.          உன்னத தூதர் சேனை                         விண்ணில் புகழுவார்;             மாந்தர், படைப்பு யாவும்                         இசைந்து போற்றுவார். 3.          உம்முன்னே குருத்தோலை                         கொண்டேகினார் போலும்,             மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்                         கொண்டும்மைச் சேவிப்போம் 4.          நீர் பாடுபடுமுன்னே                         பாடினார் யூதரும்;             உயர்த்தப்பட்ட உம்மைத்                         துதிப்போம் நாங்களும்

ஓ பெத்லகேமே சிற்றூரே

O Little town of Bethlehem Forest Green,    Christmas Carol 60                                                                                             D.C.M. 1.           ஓ பெத்லகேமே சிற்றூரே,                         என்னே உன் அமைதி!             அயர்ந்தே நித்திரை செய்கையில்                         ஊர்ந்திடும் வான் வெள்ளி.             விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே                         உன் வீதியில் இன்றே;             நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்                         உன் பாலன் இயேசுவே. 2.          கூறும், ஓ விடி வெள்ளிகாள்!                         இம்மைந்தன் ஜன்மமே;             விண் வேந்தர்க்கு மகிமையே,                         பாரில் அமைதியாம்             மா திவ்விய பாலன் தோன்றினார்                         மண் மாந்தர் தூக்கத்தில்,             விழித்திருக்க தூதரும்                         அன்போடு வானத்தில். 3.          அமைதியாய் அமைதியாய்                         விண் ஈவு தோன்றினார்;             மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்

ஓ எருசலேமியாரே

Wake O wake for night is flying Wachet auf 397                                                 8, 9, 8, 8, 9, 8, 6, 6, 4, 8, 8 1.                  ஓ, எருசலேமியாரே,             விழியுங்கள்; மெய் மார்க்கத்தாரே,                         இப்பாதி ராத்திரியிலே                         பர்த்தா வாறார்; வேகமாக             எழுந்திருங்கள்; புத்தியாக                         இருக்கும் கன்னிகள் எங்கே?                         தீவர்த்திகளையே             எடுத்தெதிர்கொண்டே                                     போம் நேரமாம்,                         என்றிரவில் அலங்கத்தில்                         நிற்பாரின் கூக்குரல் உண்டாம். 2.                      சீயோனாகிய மனைவி             சந்தோஷம் மனதில் பரவி                         விழித்தெழுந்திருக்கிறாள்;                         அவள் நேசர் மேன்மையோடும்             சிநேகத்தோடும் தயவோடும்                         வெளிப்படுகிறதினால்                         கிலேசம் நீங்கிற்று;             ஆ ஸ்வாமீ, உமக்கு ஓசியன்னா!       

ஒன்றே தேவை என்றுரைத்தீர்

Mins is noth sch Herr dies Eixe Bavarian 43 341                                                     8, 7, 8, 7, 12, 12, 11, 11 1.           ஒன்றே தேவை என்றுரைத்தீர்,                         ஸ்வாமி, அதை நாடுவேன்;             என்னை உம்மண்டைக்கழைத்தீர்,                         மாங்கையை அரோசிப்பேன்;             நான் உலகை எத்தனை தழுவினாலும்             பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும்             அனைத்தும் அபத்தம், ஒன்றானதை நான்             அடைந்தால், நான் பூரண பாக்கியவான். 2.          இதைச் சிஷ்டிகளிடத்தில்                         தேடினால், கிடையாதே;             இயேசு ஸ்வாமியின் வசத்தில்                         வாழ்வெல்லாம் இருக்குமே;             என் ஆத்துமமே, உன் இக்கட்டுக்கு சாவும்             இம்மானுவேலே பரிபூரணம் யாவும்,             அகப்படப்பண்ணுவர், அவரை நீ             உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி. 3.          இந்தப் பங்கையே மரியாள்                         தனக்குத் தெரிந்தாளே;             வாஞ்சையாகிய பசியால்                       

ஒழிந்ததே இப்பூவினில்

In Christ there is no East or West St. Bernard 234                                                                                  C.M. 1.        ஒழிந்ததே இப்பூவினில்                         எவ்வித்தியாசமாம்;             செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்                         சபை ஒன்றே ஒன்றாம். 2.          மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்                         மா ஐக்கியம் ஒன்றியே,             செய் சேவை சேர்க்கும் மாந்தரை                         பொற் கயிற்றாலுமே 3.          வாருமே, கைகோருமே, சபையில்                         எம்மனுமக்களே;             ஒரே பிதாவை சேவிக்கும்                         யாவரும் ஒன்றாமே. 4.          சேர்ந்தனரே இப்பூவினில்                         பற்பல ஜாதியாம்             மாந்தர் யாரும் கிறிஸ்துவில்;                         சபை ஒன்றே ஒன்றாம்

ஒப்பில்லாத திவ்விய அன்பே

Love Divine all loves excelling SS 242 361                                                      8, 7, 8, 7 D. 1.           ஒப்பில்லாத திவ்விய அன்பே,                         மோட்சானந்தா, தேவரீர்             எங்கள் நெஞ்சில் வாசம் செய்தே                         அருள் பூர்த்தியாக்குவீர்.             மா தயாள இயேசு நாதா,                         அன்பு மயமான நீர்,             நைந்த உள்ளத்தில் இறங்கி                         உம் ரட்சிப்பால் சந்திப்பீர். 2.          உமது நல் ஆவி தாரும்,                         எங்கள் நெஞ்சு பூரிப்பாய்             உம்மில் சார நீரே வாரும்,                         சுத்த அன்பின் வடிவாய்;             பாவ ஆசை எல்லாம் நீக்கி                         அடியாரை ரட்சியும்;             விசுவாசத்தைத் துவக்கி                         முடிப்பவராய் இரும். 3.          வல்ல நாதா எங்கள் பேரில்                         மீட்பின் அன்பை ஊற்றுமே;             விரைவாய் உம் ஆலயத்தில்                         வந்து என்றும் தங்குமே.        

ஒப்பில்லா திரு இரா

Silent Night Holy Night Christmas Caral 59                      1.          ஒப்பில்லா - திரு இரா!             இதில் தான் மா பிதா             ஏக மைந்தனை லோகத்துக்கு             மீட்பராக அனுப்பினது             அன்பின் அதிசயமாம்-             அன்பின் அதிசயமாம்! 2.          ஒப்பில்லா - திரு இரா!             யாவையும் ஆளும் மா             தெய்வ மைந்தனார் பாவிகளை             மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை             எத்தனை தாழ்த்துகிறார்-             எத்தனை தாழ்த்துகிறார்! 3.          ஒப்பில்லா - திரு இரா!             ஜென்மித்தார் மேசியா;             தெய்வ தூதரின் சேனைகளை             நாமும் சேர்ந்து, பராபரனை             பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்-             பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்!

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

Image
இதைப்பாடிய கவிராய வித்வானும் தேசபக்தனுமாகிய சுப்பிரமணிய பாரதி ஓர் இந்துவாயினும் எவ்வளவு அருமையாய் கிறிஸ்துவையும் மகதலேனா மரியாளையுங் குறித்துப் பாடியிருக்கிறார்! இவர் கிறிஸ்தவ வேதாகமத்தைத் தமிழில் புதிதாய் மொழிபெயர்க்கவும் எண்ணியிருந்தாராம்.  ஆனால் 1921-ஆம் ஆண்டு மரணமாகிவிட்டார்.  பிறந்தது 1882. 1.        'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;             எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;             நேச மா மரியா மக்தலேனா             நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்'.             தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-             தேவர் வந்து நமக்குட் புகுந்தே             நாச மின்றி நமை நித்தங் காப்பார்,             நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால், 2.          அன்பு காண் மரியா மக்தலேனா,             ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து             முன்பு தீமை வடிவினைக் கொன்றால்             மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.             பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,             போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,             அன்பெனும் மரியா மக்தலே னா.