31 July 2025

பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து

பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து

          என்னை நீர் தாங்கிடுமே

            திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து

            என்னை நீர் நடத்திடுமே

 

                        பெலன் தாருமே பெலன் தாருமே

                        உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

 

1.         எலியாவைப் போல் வனாந்திரத்தில்

            களைத்து போய் நிற்கின்றேனே

            மன்னாவைத் தந்து

            மறுபடி நடக்கச் செய்யுமே

 

2.         போராட்டங்கள் சூழ்ந்ததாலே

            சோர்ந்து போய் நிற்கின்றேனே

            சோராமல் ஓட திட மனம் அளித்திடுமே

 

3.         மனிதர்கள் நிந்தையால்

            மனம் நொந்து நிற்கின்றேனே

            மன்னித்து மறக்க

            உந்தனின் பெலன் தாருமே

 

4.         மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்

            அடிக்கடி தவறுகிறேன்

            பரிசுத்த வாழ்வு வாழ

            பெலன் தாருமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

பெலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்ல

பெலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பெலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்ல

                        ஆவியினால் என்றும் ஜெயம் வந்திடும்

 

1.         குதிரை என்பது யுத்த நாளுக்காய்

            ஆயத்தமாக்கப்பட்டிருந்தாலும்

            ஜெயத்தை தருபவர் இயேசுவல்லவா

            அவரின் பாதத்தை முத்தம் செய்யுங்கள்

 

2.         கிழக்கு மேற்கிலும் தெற்கு வடக்கிலும்

            நம்பும் திசையிலும் ஜெயம் வராது

            ஜெயம் தருபவர் இயேசு வல்லவர்

            அவரின் பாதையில் என்றும் நடப்போம்

 

3.         மனுஷன் முகத்தை பார்த்து நடந்தால்

            முடிவிலே உன்னை வெட்கப்படுத்தும்

            ஜெயத்தை தருபவர் இயேசு வல்லவா

            அவரின் ஒளியிலே என்றும் வாழ்வோம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...