நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே

நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே

            உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - 2

            பொய் சொல்லிட மனிதன் அல்ல மனம்

            மாறிட மனுப்புத்திரன் அல்ல - 2 - நீர்

            செய்வதை தடுப்பவன் யாரும் இல்லை - 2

 

                        எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே

                        யெகோவா தேவனே என்னை பெருக செய்பவரே - 2

 

1.         என் வாழ்க்கை பயணமெல்லாம் முன்

            செல்லும் மகிமையின் மேகமே தள்ளாடி

            நான் நடக்கும் போது என்னை தாங்கிடும்

            உம் கரம் நான் கண்டேனே - 2 - எல்லா

            ஏசேக்கு சித்னா முடிந்ததே ரெகோபோத்

            தொடங்கினதே - 2 எல்ஷடாய்

 

2.         அற்பமான என் ஆரம்பத்தை

            சம்பூரணமாய் மாற்றினீர்

            கண்ணீரோடு நான் விதைத்ததெல்லாம்

            கெம்பீரமாய் அறுக்க செய்தீர் - 2 - எந்தன்

            (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி

            வறட்சியை செழிப்பாக்கி

            வாழ்நாளெல்லாம் போஷித்தீர் - 2

 

 

- Ranjith Jeba

 

 

https://www.youtube.com/watch?v=VosdVxf4aK4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு