இரு மனங்கள் இணையும் இனிய விழா
இரு மனங்கள் இணையும் இனிய விழா
இறைமகனே
துணையாய் வரும் விழா - 2
அருட்சாதனமாகிடும்
விழா
அன்பினில் நிகழும் திருமண
விழா - 2
1. புதிய உறவுகள் சங்கமிக்க
- அது
புதிய குடும்பமாய் உருவெடுக்க - 2
மங்களம் பொங்கிடும்
வேளையிலே
மணமக்கள் இணைவர்
பூமாலையிலே - 2
இறை மொழி நெறி கண்டு இறைவழி தினம் சென்று
இருகரம் சேர்த்திடும் இறை உறவு - இது
இறைவன் இல்லத்தின் அருள் நிகழ்வு - 2
2. தனியொரு மனமென்ற
நிலைமாறி - இனி
பிறிதொரு உறவினை
மனமேற்க - 2
இறைமக்கள் நாம்
இங்கு ஒருங்கிணைவோம்
இறையாசீர் பொழிந்திட வேண்டிடுவோம் - 2
தாய் தந்தை வழிநின்று
தரணியில் புகழ் வென்று
இல்லறம் அமைத்திட ஜெபித்திடுவோம்
- அது
நல்லறமாகிட
வாழ்த்திடுவோம் - 2.
- A. Panneer Selvam
https://www.youtube.com/watch?v=Mj5UD3y50lc
Comments
Post a Comment