நம் வாழ்வை நன்மையாலே நிறைத்திடுவார்
நம்
வாழ்வை நன்மையாலே
நிறைத்திடுவார்
இயேசு
துணை நடப்பார்
ஏந்திக்
கொள்வார் நம்மை
தாங்கிக் கொள்வார்
நாளெல்லாம்
அவர் தோளில் சுமந்து
செல்வார்
1. வானம் பூமி
ஆளும் தேவன் நம்மை
நேசித்தார்
வாடி நின்ற
நேரமெல்லாம் நம்மை
தேற்றினார் - 2
வாழும்
வழிகாட்டி நம்மை
நித்தம் போதித்தார்
வனாந்திர
வாழ்க்கையிலே
நம்மை போஷித்தார்
இருள்
நீக்கினார் வாழ்வின்
துயர் மாற்றினார்
வருங் காலங்களில்
நம் துணையாய் நிற்பார்
- 2
2. உள்ளத்திலே
கள்ளம் நீக்கி
தூய்மை அளிப்பார்
நம் எண்ணங்களில்
செயல்களில் ஆளுகை
செய்வார் - 2
பள்ளங்களை
நிரப்பி நல் வளமருள்வார்
பாடுகளை
எதிர் கொள்ள பெலனளிப்பார்
வரும்
காலத்தை அவர் நலமாக்குவார்
வழிகாட்டியே
நல் அரணாகுவார்
- 2
3. பாலும்
தேனும் ஓடி வரும்
புது வாழ்க்கையில்
பாவ இருள்
நீங்கிவிடும்
அவர் நாமத்தில்
- 2
பாதைகளில்
தடைகளும் உடைந்து
விழும்
பாழ் மரமும்
செழித்து நல்கனி
கொடுக்கும்
துதி
கீதமும் வல்ல ஜெப தியானமும்
தினந்தோறும்
நம் வாழ்வில் நிறைவாகிடும்
- 2
4. கண்ணின்
மணி போல் நம்மை
காத்துக் கொள்வதால்
கண்ணில்
வைத்து ஆலோசனை
நித்தம் சொல்வதால்
- 2
கானம் கோடி
பாடி அவர் புகழ்
சொல்லுவோம்
கைகள் தட்டி
கெம்பீரமாய்
துதித்திடுவோம்
வழியானவர்
ஜீவன் அளிப்பாரென்று
அழிகின்ற
ஜனத்திற்கு
தினம் கூறுவோம்
- 2
https://www.youtube.com/watch?v=Pk3C7TKoQAE
Comments
Post a Comment