05 July 2024

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

                        நாதா நான் உம்மைத் துதிப்பேன்

                        கைத்தாள ஓசையுடன்

                        கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் (2)

 

1.         காண்பவரே காப்பவரே

            கருணை உள்ளவரே

            காலமெல்லாம் வழி நடத்தும்

            கன்மலையே ஸ்தோத்திரம் - ஐயா (2)

 

2.         வல்லவரே நல்லவரே

            கிருபை உள்ளவரே (2)

            வரங்களெல்லாம் தருபவரே

            வாழ்வது உமக்காக - ஐயா (2)

 

3.         ஆண்டவரே உம்மைப் பிரிந்து

            யாரிடத்தில் போவோம்

            வாழ்வு தரும் வசனமெல்லாம்

            உம்மிடம்தான் உண்டு - ஐயா (2)

 

4.         அற்புதமே அதிசயமே

            ஆலோசனைக் கர்த்தரே

            அண்டி வந்தோம் ஆறுதலே

            அடைக்கலமானவரே - ஐயா (2)

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=ppmdyKavqhk

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...