நம்ம இயேசு சுவாமி பிறந்திட்டாரு

நம்ம இயேசு சுவாமி பிறந்திட்டாரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                    நம்ம இயேசு சுவாமி பிறந்திட்டாரு

                        நம்மை மீட்க பூமி வந்திட்டாரு - 2

                        மனுஷன போல உருவெடுத்து

                        சிறு மாட்டு குடினில் பிறந்தவரே - 2

                        ஆடிப் பாடி கொண்டாடுவோம்

                        நம்ம இயேசு சாமி பண் பாடுவோம் - நம்ம

 

1.         நாளும் நம்மோட உறவாட உயிர்வாழ

            வாழும் உயிருக்கு விழிப்பூட்ட வழிகாட்ட - 2

            மண்ணின் பூ போல கண்ணின் மணியாக

            விண்ணின் திரு மைந்தன் பிறந்தாரைய்யா

            மரியின் மனுவாக மரியின் மகனாக

            இறைவன் நமக்காக பிறந்தாரைய்யா - நம்ம

 

 

2.         அமைதி ஆனந்தம் புவிமேல கவிபாட

            உண்மை பேரன்பு மனசெல்லாம் மகிழ்வோட - 2

            நீதி நிலைத்திட நேர்மை செழித்திட

            இயேசு நம்முள்ளம் வந்தாரை

            வன்முறை இல்லாத நன்முறை அன்போடு

            ஒன்றாய் நாமெல்லாம் வாழ்வோமைய்யா - நம்ம

 

 

https://www.youtube.com/watch?v=aF8RNBtkkBA

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு