தேவ தயாபரனைத் துதிப்பதில்
169
பல்லவி
தேவ தயாபரனைத்
- துதிப்பதில்
ஓய்வதில்லை
இனிமேல்
1. அற்புத
கரத்தை கொண்டடியாரை
காத்தணைத்தார்
அனுதினம்
சாற்றிடுவேன்
அன்பருக்கு
தோத்திரமே
- தேவ
2. அண்டி நெருங்கினோரை
இன்று வரையும்
தாங்கி
அன்றன்று
வேண்டியதை அன்புடன்
அளித்து வைத்தார்
- தேவ
3. கண்ணிகளுக்குத்
தப்பி கண்மணி போல
என்னை
எண்ணியே
ஆதரித்த ஏகனையே
தோத்தரிப்பேன்
- தேவ
4. அன்னை தந்தையின்
மேலாய் ஆதரித்தாரே
தாங்கி
என்னைத்
தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார்
தோத்திரமே
- தேவ
5. மன்னவன்
இயேசு தாமே மகிமையில்
தோன்றுகையில்
மணவாட்டியாக
நானும் வானத்திலே
சேர்ந்திடுவென்
- தேவ
6. எப்படிப்
போற்றுவேனோ
என்னரும்
நேசரையே
ஏத்தியே
எப்பொழுதும் தோத்திரங்கள்
ஏறெடுப்பேன் -
தேவ
https://www.youtube.com/watch?v=dea48O2bWn0
Comments
Post a Comment