எப்போது எப்போதுன்னு காத்து கிடந்த மனசு
எப்போது எப்போதுன்னு
காத்து கிடந்த மனசு
சத்தியத்தை பித்து புடிச்சு தேடுன அந்த உசுரு
எப்போது கனி கொடுப்பேன்னு
காத்துக் கிடந்த மனசு
சத்தியத்தை பித்து பிடிச்சு
தேடின அந்த உசுரு
நான் ஜெபிச்ச
ஜெபமெல்லாம்
வீணா
போகவில்லை
நான் விதைச்ச
விதை எல்லாம்
தரிசா
மாறவில்லை-2
1. சொப்பனங்கள் கண்டவனை
காசுக்கு விற்றவனை
ஊரறிய அழகு
பார்த்து அலங்கரித்தீரே
குடும்பங்கள் சேர்ந்து கொண்டு
குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு
அணைத்துக்கொள்பவரே
நீர் செய்தத
நெனச்சு
நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும்
மனசு பாடுது
புதுசு - நான் ஜெபிச்ச
2. திக்கி திக்கி பேசும் என்னை
மந்த நாவை கொண்டவனை
இராஜாக்களை
தள்ளி ராஜாவாக்கினீர்
அழைப்பே இல்லை
என்று
அழைத்து சொன்னவர் முன்
அரியணை கொடுத்து
என்னை அரசனாக்கினீர்
நீர் மட்டும் இல்லனா
என்ன நான் செஞ்சிருப்பேன்?
எத்தனையே பேர நம்பி
ஏமாந்தும் போயிருப்பேன்! - நான் ஜெபிச்ச
- Giftson Durai
https://www.youtube.com/watch?v=In__4CEnO-Y
Comments
Post a Comment