நம்பவேண்டாம் உலகை நம்பவேண்டாம்
334.
இராகம்: பைரவி ஆதி
தாளம்
பல்லவி
நம்பவேண்டாம்;
உலகை நம்பவேண்டாம்
அனுபல்லவி
நம்பவேண்டாம்,
இவ்வுலகம் யாவும்
விழல்[1] என்று
சால்மோன்
செம்மையாய்
அறிந்துரைத்தான்;
இம்மையில் உழன்றுழன்று
- நம்ப
சரணங்கள்
1. மன்னர்
மகுடரும் பால சின்னவரும்
ஓர் நமிஷம்
தன்னிலே
அழிவதல்லால் பின்
வழக்கே தொன்றுமில்லை
- நம்ப
2. காயத்தைப்[2] பிரிந்த
துன்னுயிர் ஏகி,
ஒரு நாள் இருந்தால்;
நேய
சுற்றம், மக்கள்,
பெண்டீர் மாயமாய்
அகன்று நிற்பார்
- நம்ப
3. பிள்ளை
இடு காடு மட்டும்,
பெண்கொடியாள்
வாசல் மட்டும்;
தெள்ளிய
அன்பர் பொருள்
கைக்குள்ள நாளளவு
மட்டும் - நம்ப
4. ஆசையாய்க்
கருத்தில் உன்தன்
ஏசுவைப் பதித்து
நிதம்
ஓசையாய்
ஜெபித்து வந்தால்,
மோசம் இல்லை, வேறெதையும்
- நம்ப
- சத்தியநாதன்
உபதேசியார்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment