என்னை மீட்டெடுத்து காத்து நடத்தும்
என்னை மீட்டெடுத்து காத்து நடத்தும்
இயேசு தேவனை
நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன்
நன்றி மனதோடு - 2
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன்
நன்றி மனதோடே
1. சென்ற காலம் முழுதும் கண்மணி போல்
காத்துக் கொண்டாரே
தீங்கணுகிடாமல்
கேடகமாய்
வாழ்வில் வந்தாரே - 2
தாயுமானாரே
தந்தை ஆனாரே - (2) - நன்றி மனதோடே
2. தாழ்வில் இருந்த என்னை
கண்ணோக்கிப் பார்த்தாரே
அறிவுக்கெட்டா
உயரத்திலே
உயர்த்தி வைத்தாரே
- 2
உயர்த்தி வைத்தாரே
உன்னதத்தில்
அமர வைத்தாரே
- 2 - நன்றி மனதோடே
3. ஜீவன் உள்ள காலமெல்லாம்
பாடிடுவேனே
கர்த்தர் எனக்கு நன்மை செய்தார்
நான் மறவேனே
- 2
நல்லவர் நீரே
சர்வ வல்லவர் நீரே - 2 - நன்றி மனதோடே
- Solomon Robert
https://www.youtube.com/watch?v=OFAJ7rIH6SE
Comments
Post a Comment