நடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே

நடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

128. இராகம்: உசேனி                    ஆதிதாளம் (421)

 

                             பல்லவி

 

          நடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே-புவி தனக்கு

          நாயன் கிறிஸ்து நின்று; ஞாயம் புரிய வென்று.

 

                             அனுபல்லவி

 

          கடு மரக்கனி தின பவமதில் விளை உல

            கதில் உறு மனுடர்கள் அவரவர் கிரியைகள்

            கிடு கிடென் றொலி பெறும் மடமடப் பொடு வரு

            கிறிஸ்துவின் நாளினில் விரித்துமே வெளிப்படு - நடுத்

 

                             சரணங்கள்

 

1.         சூரியன் அந்தகாரம் ஆம்; சுடும் அந்நாள் முன்

            சுத்த நிலாவும் ஒளி அற்று மறைந்து போகும்;

            துலக்க வெள்ளிகள் அதிரும்,-தொகை தொகையாய்ப்

            பெலத்துப் பழம் போல் உதிரும்;-பெருக்கமொடு

            பேச்சில் வானம் அசையும்; ஆச்சரியம் இசையும்

            பேதையர் தாமும் மருள்வர்,-பிரியமாகப்

            பாரினில் பெண்களைக் கொள்வர்கள், கொடுப்பார்கள்,

            பயம் அறச்செலிக்கினில் புசிப்பர்கள், குடிப்பர்கள்;

            வீரியமாய்ப் பல கட்டுவர், நாட்டுவர்;

            விதத்துடனே கொடுந் தீமைகள் புரிகுவர். - நடுத்

 

2.         ஆர்ப்பரிப்போடு வருவார்;-ஆகாயமுடன்

            அண்டம் குலுங்கிடவே, எண்டிசையும் உருகும்,

            அக்கணம் தூதர் நடப்பார்; அதிர்ச்சி உற

            எக்காளத் தானும் தொனிப்பார்,-எல்லாரும் அப்போ

            எழும்பிக் கல்லறை விட்டே ஒடுங்கி கிறிஸ்துவுக்கு

            எதிர் சென்று வானம் ஏகுவார்;-ஏகோபித் தன்று

            பார்ப்பார்கள் கிறிஸ்துவை, பாவிகள் நடுங்குவர்;

            பரன் அருள் அடைந்த நல் பாக்கியர் களிப்பர்கள்;

            தீர்ப்புகள் பெற எனத் திருமகன் ஆசனம்

            சேர்த்துமே, அனைவரைப் பார்த்துமே உரை சொலி - நடுத்

 

3.         எங் கோன் [1]கிறிஸ்து நின்றுமே,-இரு வகுப்பாய்

            இடையன் ஆடும் கிடாயும் நடுவாய்ப் பிரிக்கும் நேராய்,

            இஷ்டரை வல பக்கமும்,-இறுமாப்பான

            துஷ்டரை இட பக்கமும், தொகைப்படுத்தி

            சுகமாய் வலது பக்கத்துற்ற பக்தரே, நீங்கள்

            துவக்கு லோகமுதல் வைத்த-சுக உலகம்

            இங்கிதமாய் அடைந் திளைப்பற மகிழுங்கள்;

            இடப் புறக் கொடியரே, என்னை விட்டிங் ககலுங்கள்;

            பங்கமாய் அலகை[2]க்கும், அவனுடைத் தூதர்க்கும்,

            பத்திரமாம் நரகத்தினில் விழும், என - நடுத்

 

 

- ஏசடியான் உபாத்தியாயர்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] அரசர்

[2] பேய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு