தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு

தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு

                        பயங்கள் நீக்கி துதிபாடு

                        இரட்சகர் உன்னை நேசிக்கிறார்

                        இரட்சித்து உன்னை காத்திடுவார் - 2

 

 

1.         சிருஷ்டிகரே உன் நாயகர்

            கர்த்தர் என்பது அவர் நாமம் - 2

            பரிசுத்த தேவன் உன் மீட்பர்

            சர்வ பூமிக்கும் அவரே தேவன் - 2

 

2.         நித்திய காலத்து நீதியை

            நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்

            கர்த்தரின் கரத்தின் கிரீடமும்

            ராஜ முடியும் நீ ஆவாய்

 

3.         கைவிடப்பட்டவள் நீ அல்ல

            பாழான தேசம் நீ அல்ல

            எப்சிபா பியூலா என்று சொல்லும்

            புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்

 

 

https://www.youtube.com/watch?v=KlA78_EAcCE

https://www.youtube.com/watch?v=HRf_f6PK_6Y

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு