நமது இயேசு கர்த்தரென்று

நமது இயேசு கர்த்தரென்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நமது இயேசு கர்த்தரென்று

            நாவுகள் யாவும் அறிக்கையிடும்

            முழங்கால் யாவும் முடங்கிடும்

            அவர் முன் முழங்கால் முடங்கிடும்

 

                        ஆமென் அல்லேலூயா - 4

 

1.         சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்

            அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் - 2

            வல்லமை தேவனை நித்திய தேவனை

            ஜாதிகள் யாவும் அறிந்திடுமே   - ஆமென்

 

2.         ஊற்றுண்ட பரிமள தைலமவர்

            உலகில் வாசனை வீசுபவர் - 2

            ஆதியும் அவரே அந்தமும் அவரே

            நித்திய நாமம் உடையவரே - ஆமென்

 

3.         வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே

            வானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் - 2

            தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

            பூமியின் கீழானோர் பணிந்திடுவார் - ஆமென்

 

 

https://www.youtube.com/watch?v=AW_srr07uHA

https://www.youtube.com/watch?v=_o1sj4sG69g

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு