05 July 2024

நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

            நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்

 

                        நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த

                        நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்

 

            நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்

            நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை தூக்கி நிறுத்துவார்

 

                        நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

 

1.         எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே

            யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே

            முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா

            இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா

            நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

 

2.         அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா

            அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா

            உள்ளங் கைகளில் உன்னை வரைந்தவர்

            உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்

            உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்

            நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

 

3.         உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை

            உன்னுடைய துயரங்களில் உனக்கு பங்கு கொள்ள வருவதில்லை

            உள்ளத்தின் பாரங்கள் அறிந்தவர் இயேசுதான்

            உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்

            நெஞ்சுக்குள்ளே நினைத்தால்

            ஓடி வரும் தேவன்தான்

            நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...