நாளானது அதை விளங்கப்பண்ணும்
நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்
நான் செய்வதெல்லாம்
மண்ணென்று நகைத்தோரை
அந்நாளில் பொன்னென்று கேட்க
செய்வீர் - 2
உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன் கொண்டு
துதிப்பேன் - 2
1. என்னோடு வந்தவர் உண்டு
எனைவிட்டு போனோரும் உண்டு - 2
நடுவோரல்ல பாய்ச்சுவோ ரல்ல - (2)
விளைச்சலை உம்மாலே
கண்டேன் - 2 - நான்
2. குதிரையை நம்புவோர் உண்டு
இரதத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு
செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தால் அல்ல பராக்கிரம் அல்ல - (2)
ஆவியால் ஜெயமதை
அடைந்தேன் - நான்
3. தரிசனம் தந்தவர் நீரே
ஒத்தாசை தருபவர் நீரே - 2
நான் காணும் கானான் வெகு தூரமானாலும்
- (2)
நிச்சயம் கொண்டு செல்வீரே
- நான்
- Ps. John Jebaraj
https://www.youtube.com/watch?v=hlsrljLaVjA
Comments
Post a Comment