05 July 2024

நமக்கொரு தகப்பன் உண்டு

நமக்கொரு தகப்பன் உண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        நமக்கொரு தகப்பன் உண்டு

                        அவரே நம் தெய்வம்

                        எல்லாமே அவரிலிருந்து வந்தன

                        நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

 

1.         திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்

            தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்

            உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்

 

                        அப்பா.. அப்பா.. தகப்பனே என்று

                        கூப்பிடுவோம்

 

2.         ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்

            ஊருவாக்கி மகிழ்கின்றார்

            ஒவ்வொரு நாளும்

            கேட்பதை கொடுத்திடுவார்

            தட்டும் போது திறந்திடுவார்

 

3.         இரக்கம் நிறைந்த தந்தை அவர்

            ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்

            கணவனை இழந்தவர்க்கு

            காப்பாளர் அவர்தானே

 

4.         குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்

            எகிப்தில் இருந்து என்னை

            அழைத்துக்கொண்டார்

            கரங்கள் பிடித்துக் கொண்டு

            நடக்கப் பழக்குகிறார்

 

5.         அன்புக் கரங்களாலே

            அணைத்துக் கொண்டார்

            பரிவு என்னும் கயிறுகளால்

            பிணைத்துக் கொண்டார்

            நுகத்தை அகற்றிவிட்டார்

            ஜெயத்தை தந்துவிட்டார்

 

 

                        (பின்வருமாறும் பாடலாம்)

 

            எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே

            எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன

            எந்நாளும் உமக்குதானே ஆராதனை

 

1.         திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் நீரே

            தேவைகளை அறிந்த நல்ல தந்தை நீரே

            உணவு ஊட்டுகிறீர் உடையும் உடுத்துகிறீர்

 

 

2.         ஆட்கொண்டு நடத்துகிறீர் அதிசயமாய்

            உருவாக்கி மகிழ்கின்றீர் ஒவ்வொரு நாளும்

            கேட்பதை கொடுத்திடுவீர் தட்டும்போது திறந்திடுவீர்

 

3.         இரக்கம் நிறைந்த தந்தை நீரே

            ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே

            கணவனை இழந்தவர்க்கு

            காப்பாளர் நீர்தானைய்யா

 

4.         குழந்தையாய் இருந்த போதே நேசித்தீரே

            எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டீர்

            கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்குகிறீர்

 

5.         அன்பு கரங்களாலே அணைத்துக் கொண்டீர்

            பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டீர்

            நுகத்தை அகற்றிவிட்டீர் ஜெயத்தை தந்துவிட்டீர்

 

 

https://www.youtube.com/watch?v=Bdueer6b6NA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...