ஆயிரம்
தோத்திரமே இயேசு ராஜனுக்கே - (2)
கோடான
கோடி துதிகள் செலுத்தி
போற்றிப்
புகழ்ந்திடுவேன் - 2 - ஆயிரம்
1. நன்மைகள்
செய்பவரே
நன்றி
செலுத்துகிறேன் - 2
நடந்ததெல்லாம்
நன்மைக்காகவே
கோடி ஸ்தோத்திரமே
- 2 - ஆயிரம்
2. வியாதியில்
வைத்தியராம்
வியாகுலம்
தீர்த்தவரே - 2
வாதை ஒன்றும்
என்னைத் தொடாமல்
தோளில்
சுமந்தவரே - 2 - ஆயிரம்
3. விண்ணப்பம்
கேட்டவரே
விடுதலை
தந்தவரே - 2
விண்ணக
ஆவி வந்தீரே என்னில்
வணங்கி
வாழ்த்துகிறேன் - 2 - ஆயிரம்
- Pastor Samson Jayakumar
No comments:
Post a Comment