28 July 2026

ஆயிரம் இருந்து என்ன நமக்கு ஆலயம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆயிரம் இருந்து என்ன நமக்கு - தேவ

            ஆலயம் ஒன்றே போதும் - 2

 

                        நாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்கு

                        நம் நாயகன் அன்பொன்றே போதும் - இயேசு

                        நாயகன் அன்பொன்றே போதும் - ஆயிரம்

 

1.         காலமென்னும் ஊஞ்சலிலே

            கனிவுடனே நம்மை ஆட வைத்தார் - 2

 

                        அன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார் - (2) - நல்ல

                        பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார்

                        வேதனை தீயால் புடமிட்டார்

                        தேவா ....... தேவா ...... தேவா .....

                        வேதனை தீயால் புடமிட்டார் - கடும்

                        சோதனையால் நல் மெருகிட்டார் - (2) - ஆயிரம்

 

2.         ஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும்

            இந்த அகிலம் முழுவதையும் சேர்த்தாலும் - 2

 

                        ஆத்தும மீட்பு இல்லையென்றால் - (2)

                        அவைகளினால் ஒரு நன்மையில்லை

                        ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை

                        மனமே... மனமே... மனமே...

                        ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை - அந்த

                        அருள் நாதர் மாளிகையில் இடமுமில்லை - (2) - ஆயிரம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...