28 July 2026

ஆதாமின் பாவத்தால் எல்லோருமே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        ஆதாமின் பாவத்தால் எல்லோருமே

                        அடைப்பட்டு கிடந்தோம் நாள்தோறுமே

                        பாவத்தின் சம்பளம் மரணமேதான்

                        பாவியை மீட்கவே இயேசு வந்தார் ஜீவன் தந்தார்

 

1.         அழகுக்கு சௌதர்யம் இல்லாமலே

            அருமை இரட்சகர் அன்று கல்வாரியில்

            துக்கம் நிறைந்தவர் துன்புற்றாரே

            தனது உயிர் தந்து என்னை மீட்டாரே

 

2.         தெய்வீக சுதந்திரம் மகிமையும்

            தூய்மை ஒளி என்னும் வஸ்தீரமும்

            சாவாமை நித்திய ஜீவ வரம்

            பாவம் செய்தே யாவும் இழந்து போனோம்.

 

3.         இழந்ததை தேடி நாம் கண்டடைந்தால்

            இம்மையில் மறுமையில் பேரின்பமே

            இயேசுவுடன் தேவ தோட்டத்திலே

            ஏதேனில் நீடுழி வாழ்ந்திடுவோம்

 

 

- சாராள் நவரோஜி

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...