அழைக்கிறார் கனிவுடன் - வல்ல
ஆண்டவர்
இயேசு உன்னை
கல்வாரி
பாதையில்
இன்றே
நீ வந்திடாயோ - (2)
1. பாசம் கொண்டாரே
பரன் இயேசு உன்னில்
பாவி என்றுன்னை
தள்ளிடார் என்றும்
பாரங்கள்
நீக்கி ரோகங்கள் போக்கும்
பார்த்திபன்
அழைக்கும் இன்ப சத்தம் கேளாயோ - 2 - அழைக்கிறார்
2. வஞ்சிக்குமே
ஆசை உலகத்தின் மாயை
தஞ்சம்
என்றே வருவாய் அவர் அண்டை
கெஞ்சுதல்
கேட்டு சஞ்சலம் தீர்ப்பார்
அஞ்சாதே
அவர் மொழி நம்பியே நீ வாராயோ - 2 - அழைக்கிறார்
3. தூய நல்
ஆவியை பெற்றுமே அகத்தில்
தேரிடவே
நிதம் இயேசுவில் வளர்ந்தே
சிந்தையில்
என்றும் தூயராய் விளங்கி
தேவனின்
சாயலாய் மாறிடவே வாராயோ - 2 - அழைக்கிறார்
https://www.youtube.com/watch?v=EZjt1y67OQo
No comments:
Post a Comment