ஆதி அந்தம் இல்லா அன்பின் தேவனை
ஆனந்தமாக
நாம் ஆராதிப்போமே - 2
1. கானா ஊரிலே
கல்யாண வீட்டிலே
கர்த்தர்
இயேசு இருந்தார்
கலிலேயா
கடலிலே கடும் புயல் வேளையில்
படகில்
இயேசு இருந்தார்
இருக்கும்
இடமெல்லாம் அற்புதம் நடத்திடும் - (2)
இயேசுவைப்
போற்றித் துதிப்போம் - ஆதி
2. அன்பின்
ரூபமாய் இன்ப இயேசுவை
எந்நாளும்
போற்றிடுவோம்
கண்ணின்
மணிபோல நம்மை காத்திடும்
கர்த்தரை
வணங்கிடுவோம்
ஒளியாய்
வழியாய் உயிராய் இயங்கும் - (2)
உன்னதரைப்
போற்றித் துதிப்போம் - ஆதி
- சீர்காழி இயேசுபிரகாசம்
No comments:
Post a Comment