27 July 2026

அருகினில் வந்தேனே நான்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அருகினில் வந்தேனே நான்

                        என்னை ஆசீர்வதித்திடுமே

                        சுடரொளிப் பட்டயமே

                        என் வாழ்வில் சுடர்விட வந்திடுமே - 2

 

1.         ஆதியாய் அந்தமாய்

            அல்பாவாய் ஒமேகாவாய்

            ஆதியில் வந்தவரே

            அண்டினோர் வாழ்வில் இன்பம் தரும்

            என்னரும் பெருமானே - 2

 

            இருண்ட மனிதனின் வாழ்வினிலே

            ஜோதியாய் திகழ்பவரே

                        திரண்டு வந்திடும் பக்தர்களின்

                        குறைகள் தீர்ப்பவரே - 2

 

            தேவனே என் ராஜனே

            என் அன்பனே என் இன்பனே

                        உம் அன்பையே என்றும் பாடுவேன்

                        உம் புகழையே எடுத்துச் சொல்வேன் - 2 - அருகினில்

 

2.         சேரக்கூடாத ஒளியினிலே

            என்றும் வாசம் செய்பவரே

            தேடி வந்திருக்கும் எங்களுக்கு

            உம் தரிசனம் தருவீரே

 

            நாடி வந்திடும் யாரையும்

            வெறுத்துத் தள்ளாத தேவனே

                        கூடி வந்திருக்கும் எங்களுக்கு

                        உம் தரிசனம் தருவீரே - 2

 

            நல்லவரே வல்லவரே

            கருணையே கருணாமூர்த்தியே

                        நித்தியனே நிமலப்பாதனே

                        சற்குருவே உம் பாதம் சரணமே - 2 - அருகினில்

 

 

https://www.youtube.com/watch?v=zutBZ1NLbpo

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...