அலைமேலே
தவழ்வது கப்பலுக்குப் பிடிக்கும்
காற்றில் ஊஞ்சல் ஆடுவது இலைகளுக்குப் பிடிக்கும்
இயேசுவே எனக்கு ரொம்ப பிடிக்கும்
உமக்கு என்னைப் பிடிக்குமா
சொல்லுங்க
பெந்தெகொஸ்தேயன் உமக்குப்
பிடிக்கும்தானே
என்னைப் பிடிக்குமா பிடிக்குமா
சொல்லுங்க - அலைமேலே
1. உறவுவென்று சொல்ல ஓரிடம்
அதில் எனக்கு ஒரு இடம்தான் தந்திடும்
உறவுவென்று சொல்ல ஓரிடம்
அதுவும் என் இதயம்
அதில் எனக்கு ஒரு இடம்தான் தந்திடும்
ஏங்கிடும் என் மனம்
பூவுக்கு தேனாய் நானும் இருக்க கேட்கல
புல் மேலே பனியாய் நானும் இருக்க விரும்பல
- இயேசுவே
இயேசுவே எனக்கு ரொம்ப பிடிக்கும்
உமக்கு என்னைப் பிடிக்குமா
சொல்லுங்க
பெந்தெகொஸ்தேயன் எனக்குப்
பிடிக்கும்தானே
என்னால் முடியுமா என்னால்
கூடுமா சொல்லுங்க - அலைமேலே
2. ஒரு வார்த்தை சொல்லுங்க என்ன பிடிக்குமின்னு
உம் மனம் என்னும் அறையினில் ஒரு இடத்தைக்
கொடுங்க
ஒரு வார்த்தை சொல்லுங்க என்ன பிடிக்குமின்னு
மனம் அதைக் கேட்குது
உம் மனம் என்னும் அறையினில் ஒரு இடத்தைக்
கொடுங்க
அதில் இருந்திடத் துடிக்குது
இன்னும் ஏனப்பா தாமதம்
எனக்கு வேணும் உங்க இருதயம் - அலைமேலே
- Paul Dawson
No comments:
Post a Comment