27 July 2026

அருணோதயம் வந்திடும் காலமல்லோ

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அருணோதயம் வந்திடும் காலமல்லோ

                        என்றென்றைக்கும் சாமி துதி சாற்றிடுவோம்

                        பரிசுத்தமாய் ஜீவியம் செய்திடுவோம்

                        பரலோக பாக்கியத்தைப் பெற்றிடுவோம்

 

1.         விண்ணில் வாழும் தேவசேனைப் போற்றும் பாலன்

            மண்ணில் ஏழையாக வந்த மனுவேலன் - 2

            நித்தம் நித்தம் செய்யும் நன்மை யாவும்

            எத்தனை நாவாலும் பாட முடியாதன்றோ - (2) - அருணோதயம்

 

2.         சரிரத்தைப் பரிசுத்தம் செய்திடவும்

            கர்த்தாதி கர்த்தனையே சார்ந்திடவும் - 2

            வாரும் நாமும் தரிசித்திடுவோம்

            அவர் நம்மில் வைத்த தயை பெரிதேயன்றே - (2) - அருணோதயம்

 

3.         அபிசேக நாதரின் ஆசி பெறவும்

            ஆவியின் கனிகள் பெற்றிடவும் - 2

            தேவாதி தேவனின் தயை அல்லால்

            வேறே ஏதும் நம்முன் நிற்க முடியாதன்றோ - (2) - அருணோதயம்

 

 

- N. ஜட்சன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...